3 கோரிக்கை ஏற்பு; 12க்கு கைவிரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

3 கோரிக்கை ஏற்பு; 12க்கு கைவிரிப்பு

ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது:


நிதி சார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, நிதித்துறைச் செயலருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளுக்கு கூடுதல் நிதி தேவை என்பதால், தற்போது எந்த முடிவும் எடுக்கமுடியாது என நிதித்துறை தெரிவித்துள்ளது.பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்வது மத்திய அரசின் முடிவை சார்ந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வையும் ரத்து செய்ய முடியாது.


இதுகுறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் இறந்த மற்றும் ஓய்வுபெற்றோருக்கு, ஓய்வூதியம் மற்றும் பணப்பயன்கள் வழங்குவதுகுறித்து அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் உரிய உத்தரவுகள்வெளியாகும்.கடந்த, 2004க்கு பின், நியமனமான ஆசிரியர்களுக்குதொகுப்பூதிய காலம், பணிக்காலமாக வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி