'டிச.12 வரை 12 வயது பெண் குழந்தைகளும் செல்வ மகள் திட்டத்தில் சேரலாம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2015

'டிச.12 வரை 12 வயது பெண் குழந்தைகளும் செல்வ மகள் திட்டத்தில் சேரலாம்'

வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை 12 வயதான பெண் குழந்தைகளும் செல்வ மகள் திட்டத்தில் இணையலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.மேலும், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 73 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக மெர்வின் அலெக்சாண்டர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்வ மகள் சேமிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 73 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ. 2 ஆயிரத்து 328 கோடி அளவுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்தக் கணக்குகளை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் சேர முடியும். ஆனால், வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை 12 வயதான குழந்தைகளும் இத்திட்டத்தில் இணையலாம். எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கான கணக்குகளை தொடங்கலாம்'' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி