TNPSC: குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2015

TNPSC: குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்துபதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடக்கிறது.இந்தத் தேர்வுக்கென 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தயாராக உள்ளன. இந்த நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி