1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2015

1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை

தமிழக கருவூல கணக்குத்துறையில் 1,500 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகளை முடிக்க முடியாமல் ஊழியர்கள் தத்தளிக்கின்றனர்.தமிழகத்தில் 32 கருவூல அலுவலகங்கள், 229 சார்நிலை கருவூலங்கள் உள்ளன. இங்கு 5,186 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


தற்போது 3,600 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். கண்காணிப்பாளர், கணக்காளர், இளநிலை உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் பெரும்பான்மையாக காலியாக உள்ளன. தற்போதுஅவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம், மருத்துவ காப்பீடு, 'இ பென்ஷன்' போன்ற பணிகள் கூடுதல் பணிகளாக வழங்கப்பட்டுள்ளன.புதிதாக சார்நிலை கருவூலங்கள் அனுமதிக்கப்பட்டாலும், அதற்குரிய பணியாளர்களை நியமிப்பதில்லை. அதேபோல் தாலுகா அலுவலகங்களுக்கு தகுந்த சார்நிலை கருவூலங்கள் இல்லை. இதனால் கருவூல ஊழியர்கள் பணிச்சுமையால் தத்தளிக்கின்றனர்.


கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: கணக்காயர் அலுவலகத்தில் இருந்து புதிய பென்ஷன் திட்டம் கருவூல கணக்குத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கருவூல அலுவலகத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர், 2 கணக்காளர் பணியிடங்கள் கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியை முடிக்க முடியும். பென்ஷனர் எண்ணிககையும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. பணியாளர்கள் அதிகரிக்காமல் பணியை குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதனால் மனஉளைச்சலில் உள்ளோம், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி