பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுவிடும் அதிகாரிதகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2015

பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுவிடும் அதிகாரிதகவல்

அங்கீகாரம் புதுப்பிக்காமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்று விடும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்தார்.பள்ளிகளின் அங்கீகாரம்தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிபள்ளிகள் என்று 3 வகையான பள்ளிகள் உள்ளன.


இவற்றில் நர்சரி பள்ளிகள் தொடக்கப்பள்ளி இயக்குனர் ரெ.இளங்கோவன் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆயிரம் நர்சரி பள்ளிகள் உள்ளன. அது போலமெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்து 46 மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருக்கின்றன. மொத்தத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளில் ஏராளமான பள்ளிகள் அங்கீகாரம் பெற்று உள்ளன. நிலம் குறைவாக உள்ளது, கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை என்ற காரணங்களால் 600-க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பள்ளிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களால் அங்கீகாரம் புதுப்பிக்க இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.


இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை கூறியதாவது:-


தேர்வுக்கு முன்பாகபுதுப்பிக்கப்படும்மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்களால் பள்ளிகள் அங்கீகாரத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. தரமாக இருந்தால் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். அங்கீகாரம்புதுப்பிக்கப்படாமல் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களின் நிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும். அதற்குள்ளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரமும் புதுப்பிக்கப்படும்.


இவ்வாறு பிச்சை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி