சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2015

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு இணையம்மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.2016 மார்ச்சில் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிபிஎஸ்இ அமைப்பின் இணையதளமான www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


அதேபோன்று, இந்தப் பொதுத் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள விரும்புவோரும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். தாமதக் கட்டணம் இன்றி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 15 ஆகும்.


இணையம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800-11-8002 என்ற எண்ணில் காலை 9.30 மணி முதல் இரவு 7மணி வரை மாணவர்கள் அழைக்கலாம். சிபிஎஸ்இ பள்ளிகளின் மூலம் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் மூலமாக இந்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி