பள்ளி குழந்தைகளுக்குரூ.45.37 கோடியில் 2 ஜோடி சீருடை: மூன்று கட்ட நிதியளிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2015

பள்ளி குழந்தைகளுக்குரூ.45.37 கோடியில் 2 ஜோடி சீருடை: மூன்று கட்ட நிதியளிப்பு

பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு ரூ.45.37 கோடி நிதியை அரசு சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும்.


தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தையல் கூலியாக அரைக்கால் சட்டை, சட்டைக்கு தலா ரூ.22.05ம், முழு கால்சட்டை ஒன்றுக்கு ரூ.55.13ம்,முழு நீள சட்டைக்கு (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ரூ.27.56ம், ஸ்கர்ட் ஒன்றுக்கு ரூ.16.54ம், மாணவிகளின் சட்டை ஒன்றுக்கு ரூ.19.85ம் சல்வார் கம்மீஸ் ஒன்றுக்கு ரூ.55.13ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி சமூகநலத்துறை சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பிரித்துவழங்கப்பட உள்ளன.முதல் பருவ 2 ஜோடி சீருடைகளுக்கு தையற்கூலியாக ரூ.45 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 827 ஒதுக்கப்பட்டது.


அதில், 50 சதவீதத் தொகையான ரூ.21 கோடியே 95 லட்சத்து 27 ஆயிரத்து 676 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ.23 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 151 விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியை அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது.சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மகளிர் சுய உதவிகுழு கூட்டுறவு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி