விஜயதசமி தொடர் விடுமுறை: அக்.21-ல் அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

விஜயதசமி தொடர் விடுமுறை: அக்.21-ல் அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

விஜய தசமியை பண்டிகைக்கு 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம் வரும் 21-ம் தேதி குறிப்பிட்ட சில சேவைகளை வழங்க தமிழக அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.இது தொடர்பாக தமிழக அஞ்சல் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


விஜய தசமி பண்டிகைக்காக வரும் 21 முதல் 23-ம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.விரைவு அஞ்சல் மற்றும் பதிவு செய்யாத முதல் நிலை அஞ்சல் சேவைகள் மட்டும் 21-ம் தேதி வழங்கப்படும். இவை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல் விநியோக அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி