ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வுக்கு மாணவர் சேர்க்கை: அரசு பயிற்சி மையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வுக்கு மாணவர் சேர்க்கை: அரசு பயிற்சி மையம் அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை தேர்வில் (Preliminary) வெற்றி பெற்றவர்கள், தமிழக அரசின் கீழ் இயங்கும் பயிற்சி மையத்தில், முதன்மை தேர்வுக்கான பயிற்சியில் சேர நாளை வரை விண்ணப்பிக்கலாம்.


இதுதொடர்பாக தமிழக அரசின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


யூ.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வின் இரண்டாவது கட்டமான, முதன்மை தேர்வுக்கான (MAINS EXAM) பயிற்சியில் சேர விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை 15-ம் தேதி (நாளை) வரை, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, காஞ்சி வளாகத்தில் உள்ள குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பெறலாம்.பெறப்படும் விண்ணப் பங்களின் அடிப்படையில் இம்மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் சேர்க்கை நடைபெறும். பல்வேறு பிரிவுகளின் கீழ் 225 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப்பயிற்சி மைய மாணவர்களை தவிர, இதரபயிற்சி மையத்தில் பயின்றவர்கள், தனியாக தேர்வு எழுதி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம்.பயிற்சிக் காலத்தில் இலவச விடுதி மற்றும் உணவு வழங்கப்படும். மேலும் பயிற்சியின்போது மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மைய முதல்வரை 044-24621475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.civilservicecoaching.com என்ற இணையதள முகவரியில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி