ஆசிரியர் தகுதித் தேர்வு:மதிப்பெண் தளர்வுடன் தேர்ச்சி பெற்ற 211 பேர் முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு:மதிப்பெண் தளர்வுடன் தேர்ச்சி பெற்ற 211 பேர் முடிவுகள் வெளியீடு.

புதுச்சேரி தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சி பெற்ற 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 26.5.15ஆம் ஆண்டில் 425 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில்சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த 10.7.15-ல் ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களை நிலுவையில் வைக்க உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.இதன் பின்னர் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும் பெற்ற 214 பேரின் முடிவுகள் கடந்த 25.9.15-ல் வெளியிடப்பட்டன.இதனிடையே கடந்த 9.10.15-ல் சென்னை உயர்நீதிமன்றம் தான் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்கியது.இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.மேலும் 211 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19.10.15, 20.10.15 தேதிகளில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறும் என்றார் குமார்.

26 comments:

  1. நன்றி கல்விச்செய்தி, புதுச்சேரி அரசு மதிப்பெண் தளர்வுக்கு முக்கியத்துவம் வழங்கிவிட்டது

    ReplyDelete
  2. நான் கூட தமிழ்நாட்ல யோனு நினைச்சேன் புதுச்சேரினா புதுச்சேரிதான் எல்லா விசயத்திலேயும்.

    ReplyDelete
  3. 4900 group 4 announcement will come shortly.
    .
    .Mr.Arulmozhi.

    ReplyDelete
  4. தமிழ்நாடு அரசும், சுப்ரீம் கோர்ட்டும் என்ன செய்ய போகிறது தமிழ்நாடு TET Exam எழுதிய வர்க்கலூக்கு

    ReplyDelete
    Replies
    1. padichu pass seithaal velai illai faila ponathaan velai endru sollum ,

      Delete
  5. 2010cv caus judjement ennaiku friends?

    ReplyDelete
  6. நண்பர்களே தமிழ் நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு தொடர்பான உச்ச நீதி மன்ற வழக்கு நிலை என்ன ?

    ReplyDelete
    Replies
    1. TNTET 5% relaxation case details are no where to be seen on any of these blogs!!! why???

      Delete
    2. Anaithu valakugalum ondrinaika pattu visaranai niluvayil ulathu nanbare

      Delete
    3. Sir pudhucherry govtum exam mudinchu CV mudindha piragu relaxation announce pannunangala tamilnadu govt madiri

      Delete
    4. Mail me mam dinesht.3513@gmail.com

      Delete
  7. நிச்சயமாக தமிழக அரசின் செயல்பாடு ஆமை வேகத்தை விட குறைவு . ( எப்போதும் ஆமை வெற்றி பெறாது ) lab asst , T E T என்று கல்வித் துறை பணிகள் அரசின் கட்டுபாடற்ற நிலையில் உள்ளதா இல்லை அரசு அதிகாரிகளை அரசு கட்டுபடுத்துகிறதா ?

    ReplyDelete
  8. Kalviseidhi nanbargale tet examla than lot of problems iruku but pg examla yendha problem illa so exam announce pannaradhukulla niraiya padinga exam announcement vandhuta tension adhigamaidum so yendha doubt um illama dailyum padinga niraiya padinga thiruppi thiruppi padinga kandippa success agum all the best friends

    ReplyDelete
    Replies
    1. Correct medan...medam how to remember objective questions?

      Delete
    2. Yendha objective Question nna irundhalum adhai sambandhapatta paragraph oda serthu our para va mind la puriyavechukkanga just objective questions nu singlea padikkadhinga Apparam particular words mattum illama sentence fulls understand pannikonga you can do it

      Delete
    3. Objective questions Ku friends and father mother neighbours ippadi yaarayachum adikadi question keatka sollunga again and again

      Delete
    4. sathish sir... ur no plz....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. when trb polytecnic and engg advt.. anyone plz tell .

      Delete
  9. When did Group IV 2015 counselling?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி