21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

மதுபானங்களை 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.இது தொடர்பாக நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள், மதுக்கூடங்கள்) விதிகள் 2003, விதி எண் 11 ஏ-வின்படி, 21 வயது நிரம்பப் பெறாதவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுதவிர, 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் மது விற்பனைச் செய்வதை உறுதிசெய்ய, முறையான சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்து, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வயது வரம்பு விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவது அவசியம்.


வாங்குபவரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், அவரது வயதை விற்பனையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.இந்த விதிமுறைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் உறுதியளித்தார். எனவே, இந்தவழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி