தலைமை ஆசிரியர்கள்நவ., 28ல் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

தலைமை ஆசிரியர்கள்நவ., 28ல் போராட்டம்

பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.இந்தக் கழகத்தின் மாநில பொதுக்குழு, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில் கூடியது. அதில், நிறைவேற்றப்பட்ட



தீர்மானங்கள்:


மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில், பல முரண்பாடுகள் உள்ளன.


இவற்றை நீக்க அமைக்கப்பட்ட, சீராய்வுக்குழு அறிக்கையை அமல்படுத்தவில்லை. எனவே, அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நவ., 28ம்தேதி, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை, 10 மடங்கு அதிகரித்துள்ளது. அரசின், 14 வகை இலவச திட்டங்கள்; வருவாய் துறை பணிகளாலும், ஆசிரியர்களின் பணி பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, தனி அலுவலரைநியமிக்க வேண்டும்.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி