குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2-இல் (குரூப் 2) உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2ல் உள்ளடங்கிய பதவிகளைநிரப்பிட வேண்டி, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பட்டதாரிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியுடைய பட்டதாரி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியகடைசி தேதி நவம்பர் 11 ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் மேற்காணும் இணையதளங்களில் கல்வித் தகுதி, வயது வரம்பு, இதர தகுதிகளை அறிந்து, உடன் விண்ணப்பித்து வேலைக்கான போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தமிழக அரசில் வேலைவாய்ப்பை பெற முயற்சிக்கலாம். விண்ணப்பதாரர்கள், திருவள்ளூரில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் நடத்தப்பட உள்ளஇலவச முன்னோடி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.இந்த இலவச முன்னோடிப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள திருவள்ளூர் மாவட்ட மனுதாரர்கள் விண்ணப்பித்த சான்று நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.


இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

13 comments:

  1. அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களின் தகுதி என்பது வெறும் பதிவு மூப்பு, மற்றும் வயது அடிப்படையில் இல்லாமல், அறிவுப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே.
    ஒரு சாரார் இதனால் பாதிக்கப்பட்டாலும், வேலை வாய்ப்பின்மையை சமாளிக்கவும், தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு என்பதாலும், காலத்திற்கு ஏற்ப மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக ஆசிரியர்களின் அறிவும் இருக்க வேண்டும் என்பதாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது இன்றைய சூழலில் கட்டாயமான ஒன்றே.
    மேலும் புதிய பணியிடங்களுக்கு மட்டும் இது தேவை என கருதுவது தவறு.ஏனெனில் நடத்தப்படும் தேர்வு போட்டித் தேர்வு அல்ல. தகுதி தேர்வு தான். ஆனால் பணியிலிருப்பவர்களிடத்தில், வருடத்திற்கு ஒரு முறை திறனறித்தேர்வு என நடத்தும் போது, ஆசிரியர்களின் திறமை மற்றும் தகுதி போன்றவை அரசுக்கு தெளிவாக தெரிய வருவதுடன், தேர்ச்சி பெறாதவர்கள் தங்களை மேலும் தயார் படுத்திக் கொள்ளவும் உதவும்.இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் தர ஊதியம்,இதர படிகள் அளிப்பதன் மூலம் நிதி சுமையையும் அரசு குறைக்கலாம்.
    மத்திய அரசின் கல்வி கொள்கையின் படி,அனைத்து விதிகள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி என்பது அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும் போது, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குமான ஊதியமும் சமமானதாக அமைய வேண்டும்.
    குறைந்தது 15000 ரூபாய்க்கும் மேலாக சம்பளம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் போது, சில ஆயிரங்கள் சம்பளம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களும், இதற்கு இணையான வேலைகளில் இறங்க வேண்டியது அவசியம்.இதற்கென தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் இணைக்கப்பட வேண்டும்.
    இதுவரை நடந்த அடிமைத்தனம் அகன்று,தனியார் பள்ளி ஆசிரியர்களும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டுமென்றால்,வரும் 2016 தேர்தலை மையப்படுத்தி இந்த கோரிக்கையை முன்னிருத்த வேண்டும்.
    சற்றே யோசித்து பாருங்கள் ஆசிரியர்களே, எத்தனை முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வில் மட்டும் தான் மாற்றமும், ஏற்றமும் பல முறை வந்துள்ளன.தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
    கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிக்காரர்கள் செய்த சாதனைகளையெல்லாம் பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.
    யாராவது ஒருவராவது தனியார் பள்ளி "ஆசிரியர்களின்" முன்னேற்றத்திற்காகவும், பணிப்பாதுகாப்பிற்காகவும் பாடுபட்டுள்ளேன் என கூற முடியுமா?
    வேண்டாம் நண்பர்களே,ஆட்சியை விமர்சித்தால் அரசியல்வாதிக்கும், நமக்கும் வித்யாசம் இல்லாமல் போய் விடும். கேட்டுப் பெறாதது நம் தவறோ என எண்ணத் தோன்றுகிறது.
    போனது போகட்டும் நண்பர்களே, அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என பிரித்துப் பார்த்தது முடியட்டும். தனியார் பள்ளியோ, அரசு பள்ளியோ, ஆசிரியர்கள் நியமனத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் மட்டுமே மேற்கொள்வதுடன், சம்பளமும் அரசாலேயே வழங்கப்பட வேண்டும்.தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அரசு பெற்றுக் கொள்ளட்டும். மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு என வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்(தர ஊதியம், விடுப்பு உள்பட,இட மாறுதல் உள்பட)
    தமிழகத்தில் கல்வி பயில்பவனும் சரி, பயிற்றுவிப்பவனும் சரி, எந்த இடத்தில், எந்த பள்ளியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சமமாக இருக்கும் படி அமைக்கப்பட வேண்டும்.
    வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதை நிறைவேற்ற முன் வருகிறதோ, அவர்களுக்கு வாக்களித்து சமமான கல்வித்துறையை தமிழகத்தில் அமைப்பதுடன், இதுவரை நடந்த அடிமை முறை மற்றும் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

    Private school teachers pls share the phone numbers. Likes revolution peoples also

    ReplyDelete
  2. How many BT postings going to be filled through to promotion for SG and PET and special teachers.admin pls update the news

    ReplyDelete
  3. Sure there will PG xam due to election!! Study well..

    ReplyDelete
  4. Within end of November Mr Praba. January kandipa exam nadakum study well

    ReplyDelete
  5. Frnds B.Tech current yr exam eluthuravanga group 2 exam ku apply panalam ah

    ReplyDelete
    Replies
    1. எழுத முடியாது ஏனெனில் அதன் இறுதி மதிப்பெண் சான்றிதழ் இருந்தால் தான் விண்ணப்பத்தில் அதன் எண்ணை உள்ளீடு செய்யமுடியும் மேலும் தேர்ச்சி பெற்ற மாதம் வருடம் கேட்கும் இடத்தில் சரியாக குறிப்பிட வேண்டும் எனவே அப்ளிகேசன் செய்யமுடியாது எனவே கண்டிப்பாக தேர்வு எழுத முடியாது ஒரு வேளை அவர்கள் வேறு எதுவும் டிகிரி வைத்திருந்தால் தாரளமாக எழுதலாம்

      Delete
    2. Thank u karthik sir.. How r u?

      Delete
  6. Praba confirm notification November pg trb dont waste ur time study well which major for u

    ReplyDelete
  7. I am also prepare the exam sir. My major commerce

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி