கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள்தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள்தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தல்

ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பிறபணி விடுப்பு இன்றி,தற்செயல் விடுப்பு தான் வழங்க முடியும் என தலைமை ஆசிரியர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கும்.


இதனால் மாணவர்களுக்கு கல்வி பாதிப்பு இன்றி, கல்வி ஆண்டு துவக்கத்தில் மாறுதல் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் பொறுப்பேற்க எளிதாக இருக்கும். இந்தநடைமுறையால் ஆசிரியர், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது.ஆனால், இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அக்டோபர் வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.பள்ளி வேலை நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிற பணி விடுப்பு (ஓ.டி.,) தான் வழங்குவர்.ஆனால்,இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு தான் வழங்க முடியும் எனக்கூறி, தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் கூறுகின்றனர்.உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை செயலாளர் இளங்கோ கூறுகையில்,“ பொதுவாக ஆசிரியர் கலந்தாய்வை,கோடை விடுமுறையில் நடத்தினால் தான் ஆசிரியர், மாணவருக்கு எவ்விதபாதிப்பும் இருக்காது. ஆசிரியருக்கு ஆண்டுக்கு 12 நாள் தான் தற்செயல் விடுப்பு கிடைக்கும். அதேநேரம் ஆண்டு இறுதியில் கலந்தாய்வு நடத்துவதால்,பெரும்பாலான ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு இல்லாமல் தவிக்கின்றனர். இனி வரும் காலங்களில் கோடை விடுமுறையில் ஆசிரியர் கலந்தாய்வை அரசு நடத்த வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி