தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2015

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.


இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்குக் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால், அந்தப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. அதாவது, மத்திய அரசு ஒரு சதுர அடிக்கு ரூ.600 ஒதுக்குகிறது. ஆனால், கட்டடம் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1,300 வரை செலவாகிறது.


இந்தப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக கூடுதல் நிதியையும்சேர்த்து மாநில அரசு ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி, முதல் கட்டமாக 344 பள்ளிகளைக் கட்டுவதற்காக இப்போது தமிழக அரசின் பங்காக ரூ.380 கோடியும், மத்திய அரசின் பங்காக ரூ.175 கோடியும் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, கட்டடங்களைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை மாநில அரசின் பங்கீடு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பங்கு 75 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் கட்டடப் பணிகள் ஒரு மாதத்துக்குள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி