நாளை மாலை 4 மணிக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோவிற்கு அவசர அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

நாளை மாலை 4 மணிக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோவிற்கு அவசர அழைப்பு

பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார்.


ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் (பொறுப்பு) திரு.செல்வராஜ் அவர்களும் அவசர பயணமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.அதேபோல் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.இரா. தாஸ் அவர்கள் மும்பையிலிருந்து அவசர பயணமாக நாளை சென்னைக்கு விரைகிறார். பள்ளிக் இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் நாளை மறுநாள் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.சபிதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

7 comments:

  1. BT's General transfer counselling erukka ? Pls therinthavargal sollungalen. Ella next year thaana?

    ReplyDelete
  2. BT's General transfer counselling erukka ? Pls therinthavargal sollungalen. Ella next year thaana?

    ReplyDelete
  3. when is the TET case coming again??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி