ரூ.40,000 சம்பளத்தில் வேலை: அறநிலைய துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2015

ரூ.40,000 சம்பளத்தில் வேலை: அறநிலைய துறை அறிவிப்பு

நகைகளை சரிபார்க்கும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:


அறநிலைய துறையில், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சரிபார்க்கவும்,மதிப்பிடவும் குழு இருக்கிறது. இந்தக் குழுவில், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, நான்கு இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த வேலைக்கு, இந்து மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெற்று, 28 - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.தங்கம், வெள்ளி நகை செய்தல், தாமிரம் போன்ற உலோக தகடுகள் மீது தங்க முலாம் பூசுதல் ஆகிய வேலை தெரிந்திருக்க வேண்டும். மேலும், விலை மதிப்புள்ள பொருட்கள் பற்றி நுட்பமான தொழில் அனுபவம், நவரத்தின கற்களின் தரம் அறியும் திறன் இருக்க வேண்டும்.பொற்கொல்லர் தொழில், நகை வினியோகஸ்தர் மற்றும் வர்த்தகராக, ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை, www.tnhrce.org என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34' என்ற முகவரிக்கு, நவ., 15க்குள் அனுப்ப வேண்டும். பணிக்கான ஊதிய விகிதம், 9,300 - 34,800 ரூபாய், 4,200 ரூபாய் தர ஊதியம் மற்றும் விதிமுறைப்படி படிகள் வழங்கப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி