அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2015

அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னைகிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது.


பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன்மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு,மாணவர்களை பாராட்டினர்.அரியலுார் மாவட்டம், காளையங்குறிச்சி, அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கலாமின் சிறு வயது முதலான புகைப்படங்களையும், அவர் பணியாற்றிய ராக்கெட் திட்டங்களின் மாதிரிகளையும் வைத்திருந்தனர்.புதுக்கோட்டை பள்ளி மாணவர்கள், காற்றில் இயங்கும் விமானம் செய்துபறக்கவிட்டனர். இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறி கருவி,குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனம் உள்ளிட்ட, பலவித அறிவியல் கண்டுபிடிப்புகள், கண்காட்சியில் இடம் பெற்றன.


அரசு பள்ளி மாணவர்களின்இந்த தயாரிப்புகளை, தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டனர்; திறமையை வியந்து பாராட்டினர்.இதற்கிடையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், கலாம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு, கலாமின், 10அறிவுரைகள் உறுதிமொழியாக ஏற்கப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி