5,500 நர்சுகளுக்கு பணி நியமன ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

5,500 நர்சுகளுக்கு பணி நியமன ஆணை

போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, 7,243 நர்சுகளில், 5,500 பேர் பணியில் சேர்ந்துஉள்ளனர். அரசு மருத்துவமனைகளில், தேவைக்கேற்ப நர்சுகளை நியமிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 7,243 பேர் தொகுப்பூதிய பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


இவர்களில், ஐந்து பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, செப்டம்பர் முதல் வாரத்தில்பணி நியமன ஆணை வழங்கினார். அதன்பின், 5,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'படிப்படியாக, 5,500 நர்சுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, பணியில் சேர்ந்துள்ளனர். 'அரசு மருத்துவமனைகளில், காலியாக உள்ள இடங்கள் விவரம் பெறப்பட்டு வருகிறது.மீதமுள்ளோருக்கும், விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி