மின் வாரிய ஊழியர்களுக்கு 'போனஸ்' விரைவில் வெளியாகிறது அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

மின் வாரிய ஊழியர்களுக்கு 'போனஸ்' விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, தீபாவளி 'போனஸ்' வழங்குவது குறித்து, அதிகாரிகள் குழுவினர், கோடநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப்பேசினர். தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பொறியாளர்கள் என, 90 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.


மின் உற்பத்தி, மின் பகிர்மானம் உள்ளிட்ட பிரிவுகளில், 10 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், முதல் நிலை அதிகாரிகளான, 10 ஆயிரம் பேர் தவிர, மற்றவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.மின் வாரிய ஊழியர்களுக்கு, 2014ல், 8.33 சதவீத போனஸ்; 11.67 சதவீத கருணை தொகை என, மொத்தம், 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. ஒருவருக்கு, 8,400 ரூபாய் வரை கிடைத்தது. ஒப்பந்த ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, தலைமை செயலர் ஞானதேசிகன், மின் வாரிய தலைவர் சாய்குமார், எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி, மின் வாரிய நிதி பிரிவு அதிகாரிகள், 18ம் தேதி இரவு, விமானம் மூலம் கோவை சென்றனர். அன்று இரவு, கோத்தகிரியில் தங்கிய அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை, கோடநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.


இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதனால், தொழிற்சங்கங்கள் கேட்ட, 25 சதவீதத்திற்குபதிலாக, கடந்த ஆண்டை போல, 20 சதவீத போனஸ் வழங்கப்படும்; இதற்கு, 50 கோடி ரூபாய் செலவாகும். போனஸ் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா, ஓரிரு தினங்களில் வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.-

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி