தமிழ்நாட்டில் 5 இடங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’வருகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2015

தமிழ்நாட்டில் 5 இடங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’வருகிறது

அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இயக்கப்படும் “அறிவியல்எக்ஸ்பிரஸ்' ரயில் கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்த ஆண்டு தட்பவெப்ப நிலை மாற்றம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், தடுக்கும் முறைகள், இயற்கையை பாதுகாப்பது தொடர்பாக கண்காட்சி, படங்கள் ஆகியவை ரயிலில் இடம்பெற்றுள்ளன.அறிவியல் எக்ஸ்பிரஸ் கடந்த 15-ம் தேதி புதுடெல்லியில் புறப்பட்டது. 20 மாநிலங்களில் சுமார் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பயணிக்கும் அறிவியல் எக்ஸ்பிரஸ், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி வேலூர் வழியாக வந்து கும்பகோணம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை, திருநெல்வேலிஆகிய 5 இடங்களில் மொத்தம் 17 நாட்கள் நிறுத்தி வைக்கப் படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி