தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு; சங்கங்கள் வரவேற்பு- ஜூலை 1 முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு; சங்கங்கள் வரவேற்பு- ஜூலை 1 முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த அக விலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு ரொக் கமாக வழங்கப்படும். இதன்மூலம் அரசு அலுவலர்களுக்கு ரூ.4,620 வரையும், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.2,310 வரையும் கூடுதலாக கிடைக்கும்.


மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஆண்டு தோறும் ஜனவரி, ஜூலை மாதங் களில் அகவிலைப்படி உயர்த்தப் படும். இதைத் தொடர்ந்து, மாநில அரசுகளும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த செப்டம்பர் மாதம் 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் நேற்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்த்தப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள்,குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன அலுவலர்கள்,ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர் களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.இதன்மூலம் அரசு அலுவலர் களுக்கு ரூ.366 முதல் ரூ.4,620 வரையும், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.183 முதல் ரூ.2,310 வரையும் கூடுதலாக கிடைக்கும்.அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 ஆயிரத்து501 கோடியே 24 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள் ளார்.முதல்வரின் அறிவிப்பை பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

இதுகுறித்து சங்கங்களின் நிர்வாகிகள் கூறியிருப்பதாவது

:தலைமைச் செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன்:
மத்திய அரசு வழங்கியது போலவே தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 119 சதவீத மாக உயர்த்திஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு ரொக்க மாக வழங்க முதல்வர் உத்தர விட்டுள்ளார். அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் சார்பாக முதல்வருக்கு நன்றி.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ஆர்.தமிழ்ச் செல்வி: ஊழியர்களுக்கு 119 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்திருப்பதன் மூலம் விலைவாசி, பணவீக்கம் அதிகரித் திருப்பதை அறியலாம். அக விலைப்படி உயர்வை சில்லறை விலை அடிப்படையில் தயாரிக்க வேண்டும். அகவிலைப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமானால், அடிப்படை சம்பளத்துடன்சேர்க்க வேண்டும்.அகில இந்திய மாநில பணியாளர் மகாசம்மேளன பொதுச் செயலாளர் கு.பாலசுப்ரமணியன்:தமிழக அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வை அரசு பணியாளர் சங்கம் வரவேற் கிறது. தமிழக அரசு பணியா ளர்கள் சந்தித்துவரும் சிக்கல்கள் தொடர்பாக கடலூரில் வரும் 31-ம் தேதி கருத்தரங்கம் நடத்தப் படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் 7-வது ஊதியக் குழு அறிக்கை நடைமுறைப் படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். எனவே, மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர், ஜாக்டோ மாநில தொடர்பாளர் பி.இளங்கோவன்:

நிதி நெருக்கடி மிகுந்த சூழலிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்தியதற்காக தமிழக அரசுக்கு நன்றி.இவ்வாறு அவர்கள் கூறியுள் ளனர். முதுநிலை பட்டதாரி, தொழிற்கல்வி ஆசிரியர் சங்கங் களை சேர்ந்தவர்களும் முதல் வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி