‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?”-மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2015

‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?”-மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்

‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை 6-வது ஊதியஊயர்வு கமிஷன் நிர்ணயித்த சம்பளவிகிதங்களில் உள்ள குளறுபடிகளைநீக்க வேண்டும் என்பது. இதை வைத்துஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன.ஆசிரியர் சங்கங்களின் இந்தப் போராட்டம்சட்டசபை தேர்தலில் பெரிய அளவில்பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத்துறையினர் ஆளும் கட்சி மேலிடத்தின்கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.


இதையடுத்து தலைமைச்செயலகத்தில்அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் தலைமைச்செயலாளர்,நிதித்துறை செயலாளர்,பொதுத்துறை செயலாளர் ஆகியோர் கூடிய அவசர கூட்டம் நடந்தது.இதையடுத்து நிதித் துறைசெயலாளர் சண்முகம் அனைத்து துறைமுதன்மைச் செயலாளர்களுக்கும் ஓர்உத்தரவை அவசர அவசரமாக அனுப்பிவைத்தார்.

அதில் 6-வதுஊதியக்குழுவில் என்னென்ன முரண்பாடுகள் இருக்கின்றன. அதைஎப்படி தீர்ப்பது என்று அறிக்கை அளிக்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. விரைவில்ஆசிரியர்கள் பிரச்னை தீரலாம்!”

2 comments:

  1. Mentioning the 'Source of the news' (மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்) like this in every news confirm the genuineness of the news and adds best name to the blog who publish this...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி