ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்.


இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.பள்ளி கல்வித்துறை பதவிகளுக்கு, அந்தத் துறையின் ஒரு அங்கமான, தேர்வு துறையே பணி நியமனத்தை மேற்கொள்வதால், வெளிப்படைத்தன்மை இருக்குமா என, கேள்வி எழுந்தது. எனவே, 'எழுத்துத் தேர்வு என்பது தகுதித் தேர்வு மட்டுமே; நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நியமனம் நடக்கும்' என, அரசு அறிவித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், ஆட்களை தேர்வு செய்வது, நேர்மையற்ற நடவடிக்கை' என, உத்தரவிட்டார். இந்த உத்தரவு, ஜூனில் வெளியான நிலையில், ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிடாமல், கிடப்பில் போட்டு விட்டனர்.

இது குறித்து, தேர்வு எழுதிய பட்டதாரிகள் கூறுகையில், '85 லட்சம் பேர், வேலைக்காக காத்திருக்கும் நிலையில், 4,000த்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு பணி நியமனம் நடப்பது,இதுவே முதல் முறை; எனவே, தேர்வு முடிவை விரைவில் வெளியிட வேண்டும்' என்றனர்.அதிகாரிகள் கூறும்போது, 'விடைத்தாள் திருத்தப்பட்டு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன; அரசு உத்தரவிட்டால், அடுத்த நிமிடமே வெளியிட தயார்' என்றனர்.

29 comments:

  1. Engineering Trb call for panni 1 year finish aachu athai yarum news ya poda modringalayeppa

    ReplyDelete
    Replies
    1. Sir when will notification come?which dept you are?

      Delete
    2. hari sir... which dept u are...?

      Delete
    3. Hari sir two months enough to prepare for trb exam without going for job?

      Delete
    4. Sir you have all notes two month is enough but you have no notes at least you have six month

      Delete
  2. நண்பர்களே இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எந்த தேர்வும் அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தெரியும் அதுவரை பொறுமை காக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Correct sir lab assistant result spa than varum.

      Delete
  3. Lab asstent result epa varum reply panunga

    ReplyDelete
  4. நண்பர் குமரவேல் அவர்களே தெளிவாக மேலே கூறி உள்ளார்களெ திரும்பவும் நீங்கள் கேட்பது ஏன் என்று தெரியவில்லை

    ReplyDelete
  5. Result vidaruthu avargal thevai vanthal viduvanga

    ReplyDelete
  6. Result vidaruthu avargal thevai vanthal viduvanga

    ReplyDelete
  7. Please all staff all students not for vote coming election avoid the vote please share this message.

    ReplyDelete
  8. Good news lab assistant result coming 2.11.2015surely waiting see.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி