80 கி.மீ.,க்கு மேல் செல்ல முடியாது இனி! : அரசு அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

80 கி.மீ.,க்கு மேல் செல்ல முடியாது இனி! : அரசு அதிரடி உத்தரவு.

வாகனங்களில் செல்வோர், இனி மணிக்கு, 80 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல முடியாத அளவிற்கு, அனைத்து வாகனங்களிலும், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி,


அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தவேண்டும்.இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம் ஆகியவை தவிர, மற்ற வாகனங்களில், அதாவது, எட்டு இருக்கைக்கு மேல் உள்ள வாகனங்கள், மணிக்கு, 80 கி.மீ., வேகத்திற்கும் மேல் செல்ல முடியாதபடி, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.பள்ளி பேருந்து, சரக்கு வாகனம், போக்குவரத்து வாகனம் உள்ளிட்ட பிற வாகனங்கள், மணிக்கு, 60 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்லாதவாறு, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.இம்மாதம், 1ம் தேதிக்கு பின், விற்பனைக்கு வரும் வாகனங்களில், வாகன உற்பத்தியாளர்கள் அல்லது டீலர்கள், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.அதற்கு முன் வாகனம் வாங்கியவர்கள், அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1ம் தேதிக்குள்,வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்த விவரம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி