சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: தண்டையார்பேட்டையில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2015

சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: தண்டையார்பேட்டையில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது

தமிழக அரசு சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தண்டையார்பேட்டை துறைமுக பொறுப்புக் கழக விளையாட்டு அரங்கில் இன்று நடக்கிறது.தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன் னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


இந்த நிறுவனங் கள் மூலம் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை, துறைமுக பொறுப்புக் கழக விளையாட் டரங்கில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல், பட்ட மேற்படிப்பு,ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி பயின்றவர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு நிலவரப்படி, இந்த முகாமில் பங் கேற்க இணையதளம் மூலம் 65 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதுதவிர, பதிவு செய்யாதவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஆண்கள், பெண்கள் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் என்பதால், வேலைவாய்ப்புத்துறை விரிவான பாதுகாப்பு மற்றும் வசதிகளை செய்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். முகாமுக்கு வரும் அனைவருக்கும்போதுமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.


பிற மாவட்டங்களில் இருந்து அதிகமானவர்கள் இதில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதால் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், முகாம் நடக்கும் இடத் துக்கு அருகில் உள்ள திருவொற்றியூர் பஸ் நிலை யம், கிராஸ் ரோடு பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.முகாமை, அமைச்சர்கள் பி.மோகன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்ட அமைச்சர்கள் 8 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி