பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி; திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி; திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும்

சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.

8 comments:

 1. இன்று நடந்த பேச்சு வார்த்தை விவரம் :-

  👉CPS கைவிட மாநில அரசால் இயலாது.
  👉Grade Pay - தற்பொழுது மாற்ற முடியாது.
  இதன் இழப்பீட்டை வரும் Pay commission மூலம் சரிசெய்யப்படும் என்ற கருத்து .
  👉 200 G.0 படி
  finance Dept பணம் இல்லை என்கிறதாம்.
  👉cps மட்டும் இறந்தவர்களுக்கு உடனடியாக பணம் வழங்கப்படும்.

  மேலும் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 3. 2009 teachers nilama enna avathu

  ReplyDelete
 4. 2009 teachers nilama enna avathu

  ReplyDelete
 5. 2009 sgteachers nilama ennathan avathu sir

  ReplyDelete
 6. TNTF FLASH NEWS-ஜாக்டோ அமைப்பினர் மற்றும் இயக்குனருடனான பேச்சு வார்த்தை முழு விவரம்-TNTF இன்று 6.10.2015 பள்ளிக்கல்வி இயக்குனர்அழைப்பின் பேரில் மாலை 4 மணிக்குபள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அரசு சார்பாக ஜாக்டோ கோரிக்கை குறித்தான பேச்சு வார்த்தை நடைபெற்றது.இப்பேச்சு வார்த்தையில் அர்சு சார்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன்அவர்களும் ,தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் அவர்களும் கூட்டாக கலந்துகொண்டனர். ஜாக்டோ அமைப்பில் இணைந்துள்ள 24 சங்கங்களின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பொதுசெயலர் (பொ) திரு செல்வராஜ் அவர்களும்,தலைமை நிலையசெயலர் திரு சாந்த குமார் அவர்களும்கலந்துகொண்டனர் இயக்குனர் வரவேற்புக்கு பின்னர் ஜாக்டோவின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக ஜாக்டோ குழுவினர் ஒவ்வொருவராக விளக்கமாக எடுத்துரைத்தனர் அவற்றை கூர்ந்து கேட்ட இயக்குனர்கள் ஜாக்டோவின் கோரிக்கைகள் 15ல் 9 கோரிக்கைகள் நிதி சார்ந்தவைகள் ,4 கோரிக்கைகள் பணி சார்ந்தவை (நிர்வாகம்) என்றும் மீதமுள்ள 2 கோரிக்கைகள் பொதுவானவை என்றும் விளக்கினர் நிதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்விசெயலர் மற்றும் நிதிதுறை செயலர் ஆகியோர் நேற்று இரவு 9 மணிவரை ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தனர். அவ்வாலோசனையில் 1.TNTF சி.பி.எஸ் ரத்து,மற்றும் டெட் தேர்வு ரத்து என்பன இரண்டும் சட்டமாக்கப்பட்டுள்ளதால் அரசு செயலர்களால் தீர்க்கமுடியாது என்றும் இது முதல்வர் அவர்களே நேரடியாக முடிவெடுத்து.சட்டதிருத்தத்தின் மூலமே செய்யமுடியும் என தெரிவித்தனர் TNTF 2. TNTF எனினும் சி பி.எஸ் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இன்றுவரை இறந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணப்பயன், ஓய்வு பெற்றோர்க்கு வழங்கவேண்டிய பென்சன் நடைமுறைகள் குறித்தான வழிகாட்டுதல் அரசாணைகள் வழங்கப்படாமை குறித்து அரசின் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அதுகுறித்து நிதித்துறை செயலர் அரசு தலைமைச்செயலருடன் கலந்து பேசி உரிய அரசாணைகள் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவித்தனர் TNTF 3.TNTF இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியம் 4200 ஆக மாற்றுவது குறித்து விரிவான ஆலோசனைக்கு பின்னர் தற்போது வழங்குவது கடினம் என்றும் எனினும் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தும்போது கண்டிப்பாக இக்குறை களையப்படும் என நிதித்துறை சார்பாக உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்,TNTF 4. TNTF தமிழாசிரியர் பணியிடம் உயர் நிலைப்பள்ளிகளில் அனைத்து பாடங்கள் அனுமதித்த பிறகே அனுமதிப்பதை ரத்து செய்து முதலில் அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்லதாகவும் ஒரு வார காலத்திற்குள் அரசாணைவெளிவர உள்ளதாக வும் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர் .TNTF 5. TNTF தொகுப்பூதிய பணி நியமனங்கள் அனைத்தையும் நியமன நாள்முதல் பணிவரன்முறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையைபொறுத்தவரையில் அரசுப்பள்ளிகள் அனைத்திலும் நியமனம் பெற்றவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத்தொகை சுமார் 120 கோடி என கணக்கிடப்பட்டுள்ளதாகவும்,நிதி உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் பெற்றவர்கள் குறித்தான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் அதுமுடிந்த பின்னர் அதுகுறித்தான சாதகமான முடிவு விரைவில் அறிவிக்கப்பட் உள்ளதாகவும் கூறினர் .TNTF TNTF மேலும் பிற கோரிக்கைகள் குரித்து விரைவில் ஆலோசனை செய்து அறிவிப்பதாகவும்.அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். முடிவு திருப்ப்திகரமாக இருந்தால் கல்விச்செயலரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.TNTF TNTF இதன் பிறகு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்டஜாக்டோஉயர்மட்டக் குழுவினர் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.அப்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்ககல்வி சார்ந்த சங்க பொறுப்பாளர்கள் (டிட்டோஜாக்) தமது பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியரின் தர ஊதியம் 4200 என மாற்றம்,மற்றும் சி.பி.எஸ் ரத்து ஆகியன கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததால் ஜாக்டோவின் அனைத்து இயக்கப்பொறுப்பாளர்களும் திட்டமிட்டபடி அக்டோபர் 8 அன்று போராட்டத்தை நடத்துவது என ஒரு மனதாக முடிவாற்றி இயக்குனரிடம் தெரிவித்து வந்தனர் .TNTF பின்னர் இம்முடிவை பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் கூட்டாக் தெரிவித்தனர். தகவல்-திரு சாந்தகுமார்,தலைமை நிலையச்செயலர்.TNTF தொகுப்பு- திரு .கே.பி.ரக்‌ஷித்-மாநிலத்துணைத்தலைவர்TNTF.

  ReplyDelete
 7. தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் நாடு ஐஏஸ் அகாடமி. பட்ட படிப்பு .டிஆர்பி வரலாறு மட்டும் பயிற்சி நடைபெறுகிறது இடம் மதுரை தல்லாகுளம் 9600610002

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி