குட்டையில் மூழ்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2015

குட்டையில் மூழ்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

பள்ளி நேரத்தில் வெளியே சென்ற மாணவன், குட்டையில் மூழ்கி பலியானான். 'பள்ளி நேரத்தில், மாணவன் வெளியே சென்றது எப்படி?' எனக் கேட்டு, தலைமை ஆசிரியருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.


வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த, சின்னா கவுண்டனுார் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ், 12, ஜெயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று, மதிய உணவு இடைவேளையில், மாணவ, மாணவியர் சாப்பிட்டுவிட்டு, பள்ளி வளாகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். சிலர், பள்ளி அருகிலுள்ள குட்டைக்கு விளையாட சென்று இருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, குட்டையில், 5 அடி தண்ணீர் தேங்கியிருந்தது.இதனால், சதீஷ், எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்து, சேற்றில் சிக்கிக் கொண்டான். அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள், ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின், சதீஷை மீட்டு, புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியதாக கூறப்படுகிறது.

'பள்ளி நேரத்தில், மாணவர்கள் வெளியே சென்றது எப்படி; அதற்கு, யார் அனுமதி அளித்தது. யாருடைய அலட்சியத்தால், இச்சம்பவம் நடந்தது' என, பல கேள்விகளை எழுப்பி, விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, தலைமை ஆசிரியர் அளிக்கும் பதிலின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி