ரேஷனில் பருப்பு தட்டுப்பாடா? கலெக்டருக்கு உடனே தெரிவிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2015

ரேஷனில் பருப்பு தட்டுப்பாடா? கலெக்டருக்கு உடனே தெரிவிக்கலாம்!

ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை, தேவைக்கு குறைவாக வழங்கினால், அந்த விவரத்தை கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டருக்கு உடனே தெரிவிக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா, 30 ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்கிறது. ஆனால், வாணிப கழகம் குறித்தகாலத்தில், பருப்பு வகைகளை கொள்முதல் செய்யாமல் இருப்பதால், ரேஷன் கடைகளில், தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, சென்னை தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது.இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும், 1,200 ரேஷன் கடைகளுக்கு மட்டும், முழு அளவில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கூட்டுறவு சங்கம் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு, ஒவ்வொரு மாதமும், 60 சதவீத பொருட்கள் தான் வழங்கப்படுகின்றன. எனவே, வாணிப கழக அதிகாரிகள் பருப்பு, பாமாயில் அளவை குறைத்து வழங்கினால், அந்த விவரத்தை ரேஷன் கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டர், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி