தீபாவளி முன்பணம்: ஆசிரியர்களுக்கு சந்தேகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2015

தீபாவளி முன்பணம்: ஆசிரியர்களுக்கு சந்தேகம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை முன்பணம் என, 5,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளியை ஒட்டிதான், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், அதிக அளவில், முன்பணத்துக்கு விண்ணப்பிப்பர். அதேபோல், அனைத்து பள்ளிகளில் இருந்தும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு, விண்ணப்பங்கள்வந்துள்ளன, ஆனால், இதுவரை நிதித் துறை அனுமதி வரவில்லை. அதனால், முன்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:


வழக்கமாக, தீபாவளிக்கு, 15 நாள் முன்பே, முன்பணம் வழங்கப்பட்டு விடும். ஆனால், இன்னும் நிதித் துறை ஒதுக்கீடு உத்தரவு வரவில்லை என்கின்றனர். ஏற்கனவே, அகவிலைப்படி உயர்வுக்கான, நான்கு மாத நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளதால், பண்டிகை முன்பணம் கேள்விக்குறியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

3 comments:

  1. பண்டிகை கால முன் பணம் 10 நாட்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் வழங்க பட்டு விட்டது

    ReplyDelete
  2. பண்டிகை கால முன் பணம் 10 நாட்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் வழங்க பட்டு விட்டது

    ReplyDelete
  3. பண்டிகை கால முன் பணம் 10 நாட்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் வழங்க பட்டு விட்டது ,s.chidamparakumarasamy,physicaleducation teacher,govt hss,seithu-626121

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி