பி.எச்டி. கல்வி உதவித்தொகை அதிகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

பி.எச்டி. கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

ஆராய்ச்சி படிப்புக்கான (பி.எச்டி.) கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.முதுநிலை படிப்பை முடித்துவிட்டு பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜெ.ஆர்.எப்.), சீனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (எஸ்.ஆர்.எப்.) உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு பல்கலைக்கழக மானியக்குழு அல்லது சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வு நிறுவனம் நடத்தும் சிறப்புத்தேர்வில் வெற்றிபெற வேண்டும்.


அதன்படி, இதுவரை ஜெ.ஆர்.எப். கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.12 ஆயிரமும், எஸ்.ஆர்.எப். திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.14 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது. உதவித்தொகை தவிர புத்தகம் மற்றும் இதர செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தனியாக வழங்கப்பட்டது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெறலாம். இந்த நிலையில், பி.எச்டி. படிக்கும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உதவித்தொகையை யு.ஜி.சி. ரூ.4 ஆயிரம் உயர்த்தி உள்ளது. அதன்படி, ஜெ.ஆர்.எப். உதவித்தொகை திட்டத்தில் ரூ.16 ஆயிரமும், எஸ்.ஆர்.எப். திட்டத்தில் ரூ.18 ஆயிரமும்கிடைக்கும்.


ஏற்கனவே ஓராண்டுக்கு வழங்கப்பட்டு வந்த புத்தகம் மற்றும் இதர செலவினங்களுக்கான ரூ.20 ஆயிரம் தொடர்ந்து அளிக்கப்படும் என்று யு.ஜி.சி.அண்மையில் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் யு.ஜி.சி. ஜெ.ஆர்.எப்., எஸ்.ஆர்.எப். உதவித்தொகை தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை பெறுவோரின் எண்ணிக்கையை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்று தேர்வு எழுதி வரும் மாணவ-மாணவிகள் யு.ஜி.சி.க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்விவரங்களுக்கு www.csirhrdg.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

2 comments:

  1. Is there any college giving phd in chemistry as distance edn

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி