பிளஸ் 1 படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவிகளுக்கு உதவித்தொகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

பிளஸ் 1 படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவிகளுக்கு உதவித்தொகை

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று தற்போதுசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதன் படி பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.


இதற்கு விண்ணப்பிக்க, வீட்டில் ஒரே ஒரு குழந்தை அதுவும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். மேலும் இந்த மாணவி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும். விண்ணப்பப்படிவங்களை www.cbse.nic.in என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


முகவரி Section Officer (Scholarship), CBSE, Shiksha Kendra, 2 Community Centre, Preet Vihar, Delhi – 110 092.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி