முதல்வரை சந்திக்க அனுமதி தராவிட்டால் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சங்க மாநிலத் தலைவர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2015

முதல்வரை சந்திக்க அனுமதி தராவிட்டால் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சங்க மாநிலத் தலைவர் தகவல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித் துவ பேரவை, கடந்த 2 நாட்களாக உதகையில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


தமிழகத்தில் 2 லட்சம் பணியிடங்கள் காலி யாக உள்ளன. அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களால், ஊழியர்களின் வேலைப் பளு அதிகரித்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகின் றனர். கருவூலத் துறையில் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.சாதாரண துப்புரவுப் பணி யாளர்கள், காவலர் போன்ற பணியிடங்களுக்கு, ‘அவுட்சோர் சிங்’ முறையில் வெளியாட்கள் எடுக்கப்படுகின்றனர். இதில், குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது.புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்; ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எம்.எல்.ஏ.-க்களுக்கு பழைய முறையில் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் இல்லை.ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர் கள்,ஊழியர்களை மிரட்டும் போக்கை கையாளுகின்றனர்.

இதனால், தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின் றன. மக்கள் நலப் பணி யாளர்களை மீண்டும் பணி யமர்த்த வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அரசு இதுவரை அவர்களை பணியில் அமர்த்தவில்லை. வரும் டிசம்பர் 22-ம் தேதி 5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல் வரை சந்திக்கும் பெருந் திரள் போராட்டத்தில் ஈடுபட வுள்ளோம். முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கா விட்டால், ஜனவரி 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி