சென்ற ஆண்டில் பல குளறுபடிகள் நடந்ததால் இந்த முறை ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கிறார்கள் பிலிப்கார்ட் நிறுவாகத்தினர். சென்ற முறை பிலிப்கார்ட் சர்வர் டவுன் ஆனது. பலருக்கு பொருள்கள் கிடைக்கவில்லை. ஆர்டர் செய்தவர்களுக்கே பணத்தை திருப்பி தர வேண்டிய நிலைமை ஆனது. முடிவில் பிலிப்கார்டை கட்டாய மன்னிப்பு கோர சொன்னதின் பெயரில் பிலிப்கார்ட் நிறுவனமும் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் மன்னிப்பு கோரியது அனைவருக்கும் நினைவு இருக்கலாம். அப்படியும் சென்ற முறை600 கோடிக்கு விற்பனை நடந்தது.
இந்த முறை Flipkart App மூலம் விற்பனை பரிவர்த்தனை நடப்பதால் விற்பனை இரட்டிப்பாகும் என தெரிகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த பிலிப்கார்ட் இணை நிறுவனரும், முதன்மை அலுவலரும் ஆன சச்சின் பன்சால் (Sachin Bansal) 1.5 மில்லியன் பேர் பயனடைய முடியும். மேலும் விரைவில் அனைவருக்கு பொருளை அனுப்ப 19000 கூரியர் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியா முழுவதுமாக 20000 பின் கோட் இணைக்கப்பட்டு இருக்கிறது. மூன்று முக்கிய நகரங்களில் இருந்து கூரியர் மூலம் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே சென்ற முறை போன்று இந்த வருடம் பெரிய அளவில் குளறுபடி நடக்காது என நம்புவோம்.
Flipkart தற்போது மேம்படுத்திய அப்ளிகேசனை வெளியீட்டு இருக்கிறது.இங்கே கிளிக்செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான டீல்ஸ் காலை 8 மணிக்கே கிடைக்க தொடங்கும். எனவே அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கார்ட் விவரங்களை உள்ளீடு செய்து தயாராக வைத்து இருங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நானும் எதிர்பார்த்து காத்திருக்கேன் போன முறை போல பிளிப்கார்ட் தவறு செய்ய மாட்டார்கள் திரும்ப இந்த பிக் பில்லியன் டே யில் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என நம்புகிறேன்
ReplyDeletesnapdeal - oct 12th நாளை , amazon- oct 12th -17th flipkart-oct 12th -17th ஆக இந்த 12 ம் தேதியில் இருந்து 17 ம் தேதி வரை இனையதளத்தில் பொருள் வாங்கி பயன்பெறலாம் அதுவும் குறைந்த விலையில் மேற்காணும் மூன்று வலைதளங்களை தவிர மற்ற வலைதளங்களில் பொருள்வாங்குவது சேப்டி இல்லை இது தீபவளியை முன்னிட்டு வழங்கப்படுகிறது பிளிப்கார்டில் 13 ம் தேதி ஆடைகள் வாங்கலாம் 14 ம் தேதி வீட்டு உபயோக பொருள்கள் வாங்கலாம் 15 ம் தேதி மொபைல் வாங்கலாம் 16 ம் தேதி எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்கலாம் 17 ம் தேதி புத்தகம் வாங்கலாம் அந்த அந்த தேதிகளில் பிளிப்கார்டில் தயாராக இருங்கள் ஆனால் பிளிப் கார்ட் மற்றும் அமெசன் இரண்டும் மொபைல் அப்ளிகேசனில் தான் இந்த ஆப்பர் கிடைக்கும் கம்யூட்டரில் ஸ்னாப்டில் மட்டுமே ஆப்பர் தருவார்கள் இதற்கு புதிய வெர்சைன் அப்ளிகேசன் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் போலியான அப்ளிகேசனை டவுன்லோடு செய்யாதீர்கள் நன்றி கார்த்திக் பரமக்குடி