இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணிடங்களை மறைப்பதாகக் கூறி ஆசிரியர்கள் தர்னா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2015

இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணிடங்களை மறைப்பதாகக் கூறி ஆசிரியர்கள் தர்னா

சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைப்பதாக கூறி திங்கள்கிழமை ஆசிரியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கலந்தாய்வு அக்., 26, 27 இல் நடைபெறுகிறது.


இதில், மாவட்டத்திற்குள் இடமாறுதலில் செல்லும் கலந்தாய்வு திங்கள்கிழமை சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளியில் தொடங்கியது.முதலில் சமூக அறிவியல் பாடத்திற்கு கலந்தாய்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காலிப்பணியிட விபரம் அறிவிப்பு பலகையில்ஒட்டப்படவில்லை. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலந்தாய்வில கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். பின்னர் கலந்தாயும் நடைபெற்ற அறைக்கு வெளியே கீழே அமர்ந்து கோஷமிட்டபடியேதர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேர கால தாமதத்திற்கு பின்னர் காலி பணியிட விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதையடுத்து மீண்டும் கலந்தாய்வு தொடங்கியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி