சத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2015

சத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு

''அமைச்சருடன் நடந்த பேச்சு, திருப்தி அளிக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும்என, நம்புகிறோம்,'' என, சத்துணவு பணியாளர் சங்கத் தலைவர் பழனிச்சாமி கூறினார். சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, சமூகநலத் துறைஅமைச்சர் வளர்மதி தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று, பேச்சு நடந்தது.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி உட்பட, மூன்று பேரும், சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில், மூன்று பேரும் கலந்து கொண்டனர்.பேச்சுக்கு பின், பழனிச்சாமி கூறியதாவது: பணி வரன்முறை, காலமுறை ஊதியம்; ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என, அமைச்சர் உறுதியளித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி