குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.

காலாண்டுத் தேர்வில் எஸ்எஸ்எல்சி ளஸ் 2 வகுப்புகளில் 60 சதவிகித்த்துக்கும் குறைவாகவும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவிகிதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசியர்கள், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பாட ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:அரசுப் பள்ளிகளில் கல்விப் பயிலும் மாணவ, மாணவிகள் எல்லோரும் ஒரேமாதிரியாக இருக்க மாட்டார்கள். சில மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டியதிருக்கும்.அவர்கள் கல்விப் பயிலும் சூழ்நிலையை அறிந்து அந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வைப்பது ஆசிரியரின் கடமையாகும். தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளின் மீது தனிகவனம் கொண்டு அவர்களின் நலனின் அக்கறைச் செலுத்தி, பாடங்களை நடத்திட வேண்டும்.அப்படி செய்யும்போதுதான் அரையாண்டுத் தேர்வில் அதன்பலன்களை பெற முடியும். ஆண்டு இறுதித்தேர்வில் சாதனை படைக்க முடியும். எனவே இதனை கவனத்தில் கொண்டு பாடங்களை நடத்த வேண்டும்.இதுவரை 5 மாவட்டங்களில் இதுபோன்ற மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது என்றார் கண்ணப்பன்.

கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி ஆகியோர் பேசினர்.காலையில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி வகுப்புக்கான கூட்டத்தில் 56 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 152 ஆசிரியர்களும், பிற்பகலில்பிளஸ் 2வகுப்புக்கான கூட்டத்தில் 40 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 100 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி