இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம்அறிவிப்பில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபடுவோர் கருவூலத்துக்கான சாவிகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் அளிக்க வேண்டும். சாவியை ஒப்படைப்பதில் எந்த அதிகாரியும் நியமிக்கப்படாவிட்டால், கருவூல அலுவலரே தனது கைவசம் சாவியை வைத்துக் கொள்ள வேண்டும்.


தமிழக அரசின் தினசரி அலுவலகப் பணிகள் பாதிக்கும் வகையில், போராட்டங்களில் ஈடுபடுவது போன்று அச்சுறுத்துவதோ, பங்கேற்பதோ தமிழ்நாடு அரசு பணியாளர் விதிகளுக்கு எதிரானதாகும்.மேலும், பொது மக்களுக்கு சேவைகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், 2003-இல் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, அவர்கள் தமிழ்நாடு அத்தியாவசியப் பராமரிப்புகள்சட்டத்தின் கீழ் வருகின்றனர்.எனவே, செவ்வாய்க்கிழமையன்று பணிக்குவராமல், ஒட்டுமொத்த விடுப்பில் பங்கேற்போரின் விடுப்பானது, சட்டப்படி அங்கீகரிக்கப்படாது. பணி செய்யாததால், ஊதியம் வழங்கப்படாது.


ஊழியர்களின் வருகைப் பதிவேடு குறித்த விவரங்களை செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்குள்ளாக, இதற்காக வரையறுக்கப்பட்ட அட்டவணையில் விளக்கமாகக் குறிப்பிட்டு மின்னஞ்சல், தொலைநகர், தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்க வேண்டும்.மண்டல இணை இயக்குநர்கள் தலைமை இடங்களில் அமர்ந்து மாவட்ட கருவூல-கணக்குத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி