ஆசிரியர்களின் கைகளில்அரசு பள்ளிகளின் தரம் இணை இயக்குனர் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2015

ஆசிரியர்களின் கைகளில்அரசு பள்ளிகளின் தரம் இணை இயக்குனர் பேச்சு

'அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் கையில் உள்ளது; அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் தான் மாணவர் கற்றல் திறனின் இலக்கை எளிதில் அடைய முடியும்,'' என, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் மண்டல ஆய்வுக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.


முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் முன்னிலை வகித்தார்.இணை இயக்குனர் செல்வராஜ் இதை துவக்கி வைத்து பேசுகையில், ''தொடக்கக் கல்வியில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் வாசித்தல்,எழுதுதல் திறன் மற்றும் கணிதம், அறிவியலில் அடிப்படை அறிவை வளர்ப்பது கூட்டத்தின் நோக்கம். ஆசிரியர்கள் தங்களின் அர்ப்பணிப்பை அளித்தால் தான் மாணவர் அறிவுத் திறனை பெறமுடியும். அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் கையில் உள்ளது. பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், மாணவர் கற்றல் திறன் இலக்கை அடைய முடியும்,'' என்றார்.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி, ஆர்.சி., பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப், எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியன் (திண்டுக்கல்), ஜெயலட்சுமி (தேனி) மற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

2 comments:

  1. இத நீங்க சொல்லலைனா எங்களுக்கு தெரியாது பாருங்க. 15 அம்ச கோரிக்கைகள் என்ன ஆச்சு.

    ReplyDelete
  2. sir tet vazhaku ena achi pls sollunga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி