இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2015

இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

இளநிலை உதவியாளர் 32 பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை (அக்.1) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு தகுதியுடையோர் வந்து பரிந்துரை விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.செய்தி குறிப்பு விவரம்:


சென்னையில் உள்ள முதன்மைச் செயல் அலுவலரால் அறிவிக்கப்பட்ட 32 இளநிலை உதவியாளர் பணிக் காலியிடத்துக்கு தகுதியுடையோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மாநில அளவில் பதிவு மூப்பு மற்றும் தகுதியுடைய பதிவுதாரர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கணினிச் சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.வயது வரம்பைப் பொறுத்தவரை கடந்த 1.7.2015இன் படி பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம்களில் 18 முதல் 30வயது வரை பரிந்துரைக்கப்படுவர்.


அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வு இல்லை.உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பிற்பட்ட வகுப்பினரில் முஸ்லிம் 25.6.2007, பிற்பட்ட வகுப்பினரில் முஸ்லிம் மாற்றுத் திறனாளிகள் 5.2.2001 வரையும் பரிந்துரைக்கப்படுவர்.இத்தகுதியுடைய பதிவுதாரர்கள் இளைநிலை உதவியாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்படஇருப்பதால், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (அக்.1) நேரில் அனைத்துச் சான்றிதழ்களோடும் வந்து பரிந்துரை விவரத்தினைதெரிந்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி