மத்திய அரசு வேலைகளில் சேர இனி நேர்முகத்தேர்வு கிடையாது புத்தாண்டு முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2015

மத்திய அரசு வேலைகளில் சேர இனி நேர்முகத்தேர்வு கிடையாது புத்தாண்டு முதல் அமல்

மத்திய அரசு, இனி இளநிலை பணி இடங்களுக்கு நியமனங்கள் செய்கிறபோது நேர்முகத்தேர்வு நடத்துவதில்லை என முடிவு எடுத்துள்ளது. இது ஜனவரி 1–ந் தேதி புத்தாண்டு முதல் அமலுக்கு வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


புதிய முறையின்கீழ், திறனறி தேர்வு, உடல்தகுதி தேர்வு மட்டுமே நடத்தப்படும். இதன்மூலமாகத்தான் தேர்வர்கள் தங்கள் திறனை, தகுதியை நிரூபித்துக்காட்டவேண்டும். அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.ஏதாவது ஒரு துறையில் நேர்முகத்தேர்வு கண்டிப்பாக தேவை என கருதினால் இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அனுமதி பெற்று செய்ய வேண்டும்.பணி நியமனங்களில் நேர்முகத்தேர்வின்போது சிபாரிசுகளுக்கு இடம் தந்து, சொந்த பந்தங்களுக்கு முன்னுரிமை அளித்து விடுவதை தவிர்க்க இந்த முறை உதவும் என கருதப்படுகிறது.சுதந்திர தின விழாவின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ‘‘பணி நியமனங்கள் இனி தகுதியின் அடிப்படையில் நடைபெறும். பரிந்துரைகளின்படி அல்ல’’ என கூறியது, இப்போது செயலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்துக்கு பொருந்துமா.ஏனெனில் தற்போது நிரப்பிய கல்லூரி பேராசிரியர் பணியிடத்தில் நிறைய இது போன்று நடந்திருக்க வாய்ப்புள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி