தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசுஉதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2015

தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசுஉதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி

நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் சார்பாக நடைபெற்ற 1ம் ஆண்டு நிறைவு விழா பேச்சு போட்டி மதுரையில் நடைபெற்றது.இதில் சுமார் 5 மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இன்று அரசு விடுமுறையாக இருந்த போதும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்தின் ஆலோசனையின் படி ஆசிரியை திருமதி தி.முத்து மீனாள் மற்றும் ஆசிரியர் திரு.சோமசுந்தரம் ஆகியோர் காலை 5.30 மணிக்கு மாணவர்களை தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றனர்.இவர்களது பெற்றோர் யாரும் வர இயலாத நிலையில் தினசரி வேலைக்குசென்றால்தான் சம்பளம் கிடைக்கும் என்கிற நிலையில் ஆசிரியர்களே இவர்களை போட்டிக்கு அழைத்து சென்றனர்.6 முதல் 8 வகுப்பு வரை உள்ள பிரிவில் 20 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.இதனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட ஒரே பள்ளி ஆகும். 20 பேரில் இப்பள்ளி மாணவர்கள் 5 பேர் தவிரமீதமுள்ள அனைவரும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆவார்கள்.தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசு உதவி பெறும் இப் பள்ளி மாணவர்கள் போட்டி போட்டு பேசி மாணவி மு.தனலெட்சுமி என்பவர் வெற்றி பெற்றார்.இவர் வரும் 25 ம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதி சுற்றில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.இவரது தாயார் வீட்டு வேலை செய்து வரும் சொற்ப பணத்தில் இவரை படிக்க வைக்கிறார்.

போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கி கொண்டு மாணவர்களும்,ஆசிரியர்களும் வீட்டுக்கு வந்த சேர்ந்த நேரம் இரவு 9 மணி ஆகும்.இப்பள்ளி ஆசிரியர்களும்,தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கமும் இணைந்து தான் இம்மாணவர்களை தொடர்ந்து ஊக்கபடுத்தி போட்டிகளில் வெற்றி பெற வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களை நாமும் பாராட்டுவோமாக.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி