"அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு வாரம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2015

"அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு வாரம்'

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அக்.26 முதல் 31ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக கடைப்பிடிக்க ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார்.அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு வார விழிப்புணர்வு உறுதிமொழியேற்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வருவாய்த் துறை, பிற்பட்டோர் நலத் துறை, சமூகநலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சிறுபான்மையினர் நலத் துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், உணவுப் பாதுகாப்பு, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் உறுதிமொழியேற்றனர்.

ஆட்சியர் மு.கருணாகரன் உறுதிமொழியை வாசிக்க, அனைத்து துறை பணியாளர்களும் வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சீனிவாசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் விஜயாம்பிகா, கோட்டாட்சியர் எஸ். வெங்கடேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் பா. சேகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் மேலாளர் தேவபிரான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி