பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2015

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


4.20 லட்சம் பேர்


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–


தமிழகத்தில் 2003–ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்செய்யப்பட்டது.


இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இத்திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கு பிரதி மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவுத் தொகையை அரசும் தன் பங்காக செலுத்தும். அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்குத் தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிட்டு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.விடுபட்ட கணக்குகள்விடுபட்ட 21 லட்சத்து 70 ஆயிரத்து 464 வரவு நேர்வுகள், கருவூலக் கணக்குத் துறையால் சரிபார்க்கப்பட்டு உரிய அரசுப் பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு 2014–15ம் ஆண்டிற்கான கணக்குத் தாள்கள் (அக்கவுன்ட் சிலிப்ஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் யாரும் விடுவிக்கப்பட்டு இருந்தாலோ, குறைகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அரசு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வலைதள முகவரிஅரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014–15ம் ஆண்டுக்கான கணக்குத் தாள்களை, URLhttp://218.248.44.123/auto_cps/public என்ற வலைதள முகவரியில் அவரவர் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. நன்றி .தங்கள் சேவை பாராட்டுதற்குரியது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி