ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான "பைல்"ஓரங்கட்டப்பட்ட­து... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2015

ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான "பைல்"ஓரங்கட்டப்பட்ட­து...

--தினமலர் டீக்கடை பெஞ்ச் --


ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான, 'பைலை' ஓரங்கட்டி வச்சுட்டாங்களாம்ங்க...'' என்ற அந்தோணிசாமியைப் பார்த்து, விக்கித்து நின்ற அண்ணாச்சி, ''என்ன வே சொல்லுதீரு... பெரிய அளவுல போராட்டம் நடத்தி, பள்ளிகளை ஸ்தம்பிக்க வச்சதெல்லாம் அவ்வளவுதானா...'' எனக் கேட்டார்.


''ஆமாங்க... ஜாக்டோ நிர்வாகிகள் தன்னை வந்து சந்திக்கலைன்னு, பள்ளிக்கல்வி செயலக அதிகாரி ரொம்பவே கோவத்துல இருக்காங்க... அவங்க நெனச்சிருந்தா, போராட்டம் நடந்த அன்னிக்கே, மேலிட கவனத்துக்கு விஷயத்தை கொண்டு போயிருக்கலாம்... ஆனா, தலைமைச் செயலருக்கு கூட கொண்டு போகலை... ''செயலகத்துக்கு வந்து மனு குடுக்காமல், இயக்குனர்கள் கூட்டிய கூட்டத்துல மட்டும் கலந்துக்கிட்டா, கோரிக்கையை நிறைவேத்த முடியுமா... இப்போதைக்கு அவங்க, 'பைலை' திறக்க வேண்டாம்னு ஓரங்கட்டிட்டாங்களாம்ங்க...'' என்றார் அந்தோணிசாமி.

6 comments:

  1. இவர்களால் இதைதான் செய்ய முடியும் தீர்வா காணமுடியும்.?

    ReplyDelete
  2. மானங்கெட்ட சங்கங்கள் இது தெரிந்த பிறகாவது காலவரையற்ற வேலைநிறுத்தத்தை விரைவில் அறிவிப்பார்களா?
    அதிகார வெறிபிடித்தாடும் பள்ளிக்கல்வி செயலாளரையும் நிதித்துறை செயலாளரையும் அடக்குவார்களா?

    ReplyDelete
    Replies
    1. இந்த இரண்டு செயலாளர்களின் ஆட்டம் விரைவில் முடிநது விடும் காலம் வெகு தொலைவில் இல்லை .ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் இவர்கள் இருவரும் விசாரணை வளையத்திற்குள் வந்தே தீர வேண்டும் ..

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Kalvikku kodukkum mariyathai ennavenbathai kaalathin bidiyil entha arasukku padam pukattuvom

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி