ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2015

ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம்

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்தமாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.


இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும்.பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், ஒரு மாதமாகியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோப்பில், முதல்வர் கையெழுத்து போட்டு விட்டார். அறிவிப்பு வெளியாக இருந்தபோது, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்; எனவே, அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது; முதல்வரிடம் இருந்து, உத்தரவு வந்தபிறகே, அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.-DINAMALAR

5 comments:

  1. இன்னுமா இந்த தினமலர் பயபுள்ளய நம்பறிய

    ReplyDelete
  2. இன்னுமா இந்த தினமலர் பயபுள்ளய நம்பறிய

    ReplyDelete
  3. நொன்டி குதிரைக்கு சருக்கினதெல்லாம் சாக்கு

    இந்ந தினமலர் காரனுங்களுக்கு ஆசிரியர் ன்னாலே பிடிக்காது
    எப்போ எப்போன்னு இருப்பானுங்க
    ஏன்னா அவனுங்களுக்கு அந்த நாளிதழின் ஆசிரியரை பிடிக்காதுன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  4. நொன்டி குதிரைக்கு சருக்கினதெல்லாம் சாக்கு

    இந்ந தினமலர் காரனுங்களுக்கு ஆசிரியர் ன்னாலே பிடிக்காது
    எப்போ எப்போன்னு இருப்பானுங்க
    ஏன்னா அவனுங்களுக்கு அந்த நாளிதழின் ஆசிரியரை பிடிக்காதுன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  5. இதல்லாம் ஒரு காரணமா? ஏ மத்த அரசு ஊழியர்கள...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி