பேரிடர் தடுப்பு: பள்ளிகளில் போட்டி நடத்த முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

பேரிடர் தடுப்பு: பள்ளிகளில் போட்டி நடத்த முடிவு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பேரிடர் தடுப்பு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் எம். மதிவாணன். தேசிய பேரிடர் இன்னல் குறைப்பு நாளையொட்டி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:


புயல் அல்லது சூறாவளியின் போது கடலுக்குள் செல்வது அபாயம். அவ்வாறே வீட்டுக்கு வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். கால்நடைகளை, குடிநீர் மற்றும் தீவனங்களுடன் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும். புயல் தொடர்பான எச்சரிக்கை மற்றும் செய்திகளை வானொலி, தொலைக்காட்சி மூலம் அவ்வப்போது அறிந்துகொள்ள வேண்டும். நிலநடுக்கம் ஏற்படும் காலங்களில் மின் இணைப்பு, சமையல் எரிவாயு அடுப்பை உடனடியாக அணைக்க வேண்டும். கட்டடம், மரம்,மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களின் அருகே செல்லக்கூடாது.


பேரிடர் தடுப்பு குறித்து பள்ளிகளில் வரைபடப் போட்டி, கட்டுரைப்போட்டி, பேரணிகள், பேரிடர் தடுப்பு தொடர்பான துண்டறிக்கை விநியோகம் ஆகியவை அந்தந்த வட்டங்களில் நடத்தப்பட உள்ளது. இதுவரை திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் மூலம் 139 தீயணைப்பு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் மதிவாணன். நிகழ்ச்சியில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையஅலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி