தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்

தனியார் நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.தமிழ்வழி பொறியியல் கல்வி திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன.


தமிழ்வழியில் பொறியியல் படிக் கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தமிழில் நடத்தப்படும். செமஸ்டர் தேர்வையும் அவர்கள் தமிழிலேயே எழுதலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, அதன் உறுப்பு கல்லூரி களிலும் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் படிப்படியாக அறிமுகப் படுத்தப்பட்டன. தற்போது, தமிழ்வழியில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் 660 இடங்கள், மெக்கானிக் கல் இன்ஜினீயரிங் படிப்பில் 720 இடங்கள் என மொத்தம் 1,380 இடங் கள் உள்ளன.தமிழ்வழி பொறியியல் பட்ட தாரிகளின் முதல் ‘பேட்ச்’ 2014-ம் ஆண்டு வெளிவந்தது. ஆங்கிலவழி யில் பொறியியல் படித்த மாணவர் களுடன் ஒப்பிடும்போதுதமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்து. சம்பளமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சம்பளம் குறைவு என்ற போதிலும் கிடைத்த வேலையில் சேர வேண் டிய நிலைக்கு அவர்கள் தள்ளப் பட்டனர்.தமிழ்வழி பொறியியல் பட்டதாரி கள் தனியார் நிறுவனங்கள் நடத்தும் வளாக நேர்முகத் தேர்வுகளில் (கேம்பஸ் இன்டர்வியூ) மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வு செய்யப்படும் நிலை உரு வானதால், தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர மாணவ-மாணவிகள் மிகவும் தயங்கினர். அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் கலந் தாய்வில் கூட தமிழ்வழி பொறியியல் படிப்பில்சேர மாணவர்கள் ஆர்வ மாக இல்லை. கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் முதல் தலை முறை பட்டதாரிகள் ஆகியோர் மட்டுமே தமிழ்வழியில் படிப்பை தேர்வுசெய்தனர்.தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங் கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்கு முன் னரே நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், தமிழ்வழியில் பொறி யியல் படித்தவர்கள் இல்லாததால் பொறியியல் பிரிவை 20 சதவீத சிறப்புஇட ஒதுக்கீடு எட்டவில்லை.தமிழ்வழி பொறியியல் பட்ட தாரிகளின் (சிவில், மெக்கானிக்கல்) முதல் பேட்ச் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம்தான் வெளியே வந்தது. தனியார் நிறுவனங்களில், தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், தற்போது அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.


நெடுஞ்சாலைத் துறையில்..


தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறியாளர் களை (சிவில்) தேர்வுசெய்ய கடந்த செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு நடத்தியது. மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழி பொறியியல் (சிவில்) பட்டதாரிகளுக்கு ஒதுக்கப் பட்டிருந்தன.தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகள் ஏராளமானோர் இத் தேர்வை எழுதியுள்ளனர்.


விரிவுரையாளர் பதவிகள்


அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் பொறியியல் (சிவில், மெக் கானிக்கல் உள்பட) மற்றும் பொறி யியல் அல்லாத பாடப் பிரிவுகளில் 604 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ் வழியில் சிவில், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு விரிவுரையாளர் பணியிலும் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.இந்த நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 100 உதவி பொறியாளர்களை (சிவில்-75, மெக்கானிக்கல்-25) போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்ய இருக்கிறது. இதில், சிவில் பிரிவில் 12 இடங்களும், பொறியியல் பிரிவில் 4 இடங்களும் தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உதவி பொறி யாளர் பணிக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.twadrecruitment.net) விண் ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.


அண்ணா பல்கலை. பேராசிரியர் மகிழ்ச்சி


தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு பெருகிவரும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக சிவில் இன்ஜினீயரிங் துறை தலைவர் பேராசிரியர் கே.நாகமணி கூறும்போது, “தமிழ்வழியில் பொறியியல் படிக்கின்ற மாணவர்கள் செமஸ்டர் தேர்வை தமிழிலோ ஆங்கிலத்திலோ அல்லது இருமொழி கலந்தோ எழுதலாம். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் அளிக்கப்படும் 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் பொதுப் போட்டியின் கீழும் வேலைவாய்ப்பு பெறலாம். தற்போது அரசுப் பணி வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், வரும் காலத்தில் அதிகப்படியான மாணவர்கள் தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேரும் சூழல் உருவாகும்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி