கலைப்பாட தொழில்நுட்பதேர்வில் மறுகூட்டல் தேவை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2015

கலைப்பாட தொழில்நுட்பதேர்வில் மறுகூட்டல் தேவை

'கலைப் பாட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வழங்க வேண்டும்' என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் கலை, ஓவியம், இசை, கணிதம் உள்ளிட்ட, சிறப்புப் பாடங்கள் உள்ளன; இவற்றை கற்பிக்க, சிறப்பாசிரியர்கள் உள்ளனர்.


கலைப் பாடம் படித்துள்ளதுடன், தமிழக அரசு நடத்தும், தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் தான், சிறப்பாசிரியர் பணி கிடைக்கும். அதன்படி, தொழில்நுட்ப தேர்வுக்கு, 14ம் தேதி, விண்ணப்பப் பதிவு துவங்கியது; 20ல் முடிந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுக்கு பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முறையைஅமல்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார், செயலர்சாந்தகுமார் ஆகியோர், அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவியை சந்தித்து மனு அளித்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி