அரசாணைகளை படித்து பொருள் அறியும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றிய சில கருத்துக்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2015

அரசாணைகளை படித்து பொருள் அறியும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றிய சில கருத்துக்கள்

பொதுவாக அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அரசாணைகளே தமிழிலும்ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. பிற ஆங்கிலத்தில் வெளியிடப்படும்அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவதில்லை.அதனால் பல நேரங்களில் முழுமையான பொருள் புரியாமல், தகுதியானவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.


தமிழில் வெளியிடப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டாலும், ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அரசாணைகளை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருந்து அதன் வழிமுறைகளை அறிந்திருப்பது அவசியமானதாக கருதப்படுகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் சில எளிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.அரசாணைகளில் Read (பார்வை ) என்று குறிப்பிடப்பட்டு சில அரசாணைகள் வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டு இருக்கும். அதற்கு கீழே Order (ஆணை) என்று தலைப்பிட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கும்.அவ்வாறு Order என்ற தலைப்பில் அரசாணையின் விபரம் கொடுக்கப்படும் போது, முதலில் பார்வையில் வரிசைப்படுத்தப்பட்ட சில அல்லது அனைத்து அரசாணைகளின் விபரங்கள் முதலில் முதலில் விளக்கப்பட்டு இருக்கும்.உதாரணமாக, In the Government Order first read above, orders were issued - அதாவது பார்வையில் உள்ள முதல் அரசாணையில் இவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது - என்று குறிப்பிட்டு அந்த பார்வை 1-ல் உள்ள அரசாணையின் விபரம் விளக்கப்பட்டு இருக்கும். பின்னர் இவ்வாறு பார்வையில் குறிப்பிடப்பட்ட அனைத்து அரசாணைகளின் விபரம் விளக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தில் தான் நம் நண்பர்கள் பலர் தடுமாறி குழம்புகின்றனர். பணப்பயன் சார்ந்த அரசாணையாக இருந்தால், பார்வையில் உள்ள அரசாணைகளை முதலில்விளக்கும் போது, சம்பந்தப்பட்ட அரசாணையில் Monetary benefit with effect from என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.


இதனைப் படித்தவுடன் இந்த அரசாணையில் இந்த தேதியிலிருந்து Monetary benefit என்று உள்ளது என்று அந்த வார்த்தையைப் பார்த்தவுடன் monetarybenefit with effect from என்று இந்த தேதி உள்ளது, எனவே இது நமக்கு பொருந்துமா பொருந்தாதா என்று பல கேள்விகள் எழும்பி தெளிவு பெறும் முன்னரே செய்திகள் பகிரத் தொடங்கி விடுகின்றனர். பார்வையில் உள்ள அரசாணைகளின் விளக்கங்களைநிதானமாக படிக்கவும் கவனிக்கவும் வேண்டியது அவசியமாகிறது.பார்வையில் குறிப்பிடப்படும் அரசாணைகள் முதலில் விளக்கப்படுவதுபொதுவாக அரசாணைகளில் வழக்கமாக உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்வையில் காணப்படும் அரசாணைகளை விளக்கிய பின் இறுதியாக After careful considerationஎன்றோ அல்லது The Government also direct என்றோ அரசாணை எண் குறிப்பிடப்பட்டு, வெளியிடப்பட்ட அரசாணையின் பொருள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இடத்திலே என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக பொருள் அறிய வேண்டியது அவசியம், அப்பொழுது தான் சம்பந்தப்பட்ட அரசாணை எதற்காக வெளியிடப்பட்டது என்பதை அறிய முடியும்.


அதில் புரியாத வார்த்தைகள் இருப்பின், தவறாமல் அகராதியைப் பார்த்து பொருள் அறிந்து முழுமையான அர்த்தம் அறிய முற்பட வேண்டும். பார்வையில் குறிப்பிடப்படும் அரசாணைகள், சம்பந்தப்பட்ட அரசாணையில் முதலில் விளக்கப்படுவதால் அதனைப் படித்து வேகமாக monetary benefit என்று உள்ளது என்று அவசரப்பட்டுமுடுவெடுத்து, அந்தக் எண்ணத்திலேயே தொடர்ந்து அரசாணையைப் படித்துதவறான புரிதல்களை நம் நண்பர்களில் சிலர் அடைவதாலேயே, நண்பர்கள் தெளிவடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவு உங்கள் முன் வைக்கப்படுகிறது. இறுதியாக, சில அரசாணைகள் திருத்த அரசாணையாக, திருத்தம் வெளியிடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உதாரணத்திற்கு CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதிக்கப்பட்ட அரசாணையை குறிப்பிடலாம். தெளிவாக படிப்போம்!பயன்பெறுவோம்!நம் நண்பர்கள் பயன் அடையச் செய்வோம்.


தொகுப்பு:

C. தாமஸ் ராக்லண்ட்துணை பொது செயலாளர், T.A.T.A.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி